டெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் இறந்த விவகாரம்: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹான் கைது

டெல்லி: தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் இறந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர். தலைநகர் டெல்லியின் அனாஜ் மண்டி பகுதியின் ராணி ஜான்சி சாலையில் உள்ள 6 மாடி கொண்ட ஒரு தொழிற்சாலையில், இன்று அதிகாலை 5.22 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிற்சாலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் பெரும் கூச்சலிட்டனர். ஒரே மரண பீதியால், அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவலறிந்த தீவிபத்து மீட்பு குழுவினர் 35 தீயணைப்பு வாகனங்களுடன் சென்று, சம்பவ இடத்தில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர்.

இந்தத் தீ விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று அதிகாலை தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் ரேஹானை போலீசார் கைது செய்தனர்.

விபத்துக்குள்ளான கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது என்பது தீயணைப்பு துறையினரிடம் இருந்து உரிய அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Related Stories:

>