சீனாவில் நெகிழ்ச்சி.. கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய கணவர் !

சீனாவில் கர்ப்பிணி மனைவிக்காக தானே நாற்காலியாக மாறிய கணவனின் செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒருவர், தன் கர்ப்பிணி மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertising
Advertising

மருத்துவருக்காக காத்திருந்தபோது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு கால் வலிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், அங்கு அதிகக் கூட்டமாக இருந்ததால் நாற்காலிகள் அனைத்தும் நிரம்பிக் காணப்பட்டன. கர்ப்பிணிப் பெண்ணுக்கு எழுந்து இடம்தர யாரும் முன் வரவில்லை.

தன் மனைவி மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த அவரது கணவர், உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி போல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார்.இதை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். கர்ப்பிணியின் கணவரை பலரும் பாராட்டி வரும் நிலையில், அந்தப் பெண்ணுக்காக எழுந்து இடம் தராதவர்களை சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Related Stories: