×

ஏமன் போருக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது: சூடான் பிரதமர் பேச்சு

ஏமன்: ஏமன் போருக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது என்று சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்தக் தெரிவித்துள்ளார். தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சவுதி, ஏமன் போரை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறது. இதன் காரணமாக அங்கு தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் ஏமன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சூடான் பிரதமர் அப்தால்ல ஹம்தக் கூறும்போது, ஏமன் போரை குறித்து கூறினால் ஏமன் போரை ராணுவம் மூலம் தீர்வு காண முடியாது. அது எங்கள் தரப்பிலிருந்து வந்தாலும் சரி உலகின் எந்த தரப்பிலிருந்து வந்தாலும் சரி போரை அமைதி மற்றும் அரசியல்ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : war ,talks ,Military ,Yemen , Yemen War, Military, Settlement, Sudan Prime Minister, Speech
× RELATED ஓசூரில் வார் ரூம் திறப்பு