எலெக்ட்ரானிக் முறையில் அனுமதி: ஹெச்1பி விசா விண்ணப்பங்களை மார்ச் 1 முதல் 20 வரை பெறுகிறது அமெரிக்க சேவைத்துறை

வாஷிங்டன்: ஹெச்1பி விசா விண்ணப்பங்களை வரவேற்கத் அமெரிக்கா தயாராகி வருகிறது. ஹெச்1பி விசா என்பது அமெரிக்கா அல்லாதோருக்கான பணியிட குடியுரிமை அனுமதி விசா ஆகும். வெளிநாட்டைச் சேர்ந்தோர் அமெரிக்காவில்  பணி செய்ய இது மிகவும் முக்கியமான விசா ஆகும். பெரும்பாலான இந்திய ஐடி ஊழியர்கள் ஹெச்1பி விசா மூலமாகவே அமெரிக்காவில் பணி செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

அதிக திறமை கொண்ட, உயர்ந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு மட்டுமே ஹெச்1பி விசா வழங்கும் வகையில், பல்வேறு மாற்றங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. இந்த மாற்றங்கள் அமலுக்கு  வந்தால் முதுநிலை அல்லது அதற்கும் மேலான கல்வி பயின்ற வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் அதிக அளவில் ஹெச்1பி விசா பெறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த அளவு தற்போது உள்ளதைவிட சுமார் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என  அமெரிக்க அரசின் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. மேலும் ஹெச்1பி விசா அடிப்படையில் பணியமர்த்தும் நிறுவனங்கள் அமெரிக்க குடிபெயர்வு சேவைத்துறையிடம் மின்னணு முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் எலெக்ட்ரானிக் முறையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்காக ஹெச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் 2021-ம் நிதியாண்டுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன்  மூலம் பதிவு செய்து 10 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனால் விண்ணப்பிப்பவர்களுக்கு செலவு குறைவதுடன், நிர்வாக வேலையை எளிமைப்படுத்தும் வகையிலும் அமையும் என அமெரிக்க குடிபெயர்வு  சேவைத்துறை கூறியுள்ளது. புதிய விதிகள் குறித்து கடந்த 3-ம் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியிருந்தது.

இந்நிலையில், ஹெச்1பி விசா முதற்கட்ட விண்ணப்பங்கள் மார்ச் 1 முதல் 20-ம் தேதி வரையில் பெறப்படும். தேர்வு முறை எலெக்ட்ரானிக் விண்ணப்பங்களுக்குத் தேர்வுப்படும் சூழலில் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படுவோர் மட்டுமே  ஹெச்1பி விசாக்கான மனுவை ஏப்ரல் 1 முதல் அளிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Related Stories:

>