×

தடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனை 2,000 கோடி மோசடி: தம்பதி உள்பட 5 பேர் மீது புகார்

கோபி: பிட்காயின் (கிரிப்டோ கரன்சி) எனப்படும் பணமில்லா பரிவர்த்தனைக்குமத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா, நண்பர் வேலுச்சாமி, மதுரையை சேர்ந்த ராஜ்குமார், திருச்சியை சேர்ந்த குட்டி மணி ஆகியோர் கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை சந்தித்து ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாகவும், அதில் 2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் 20 ஆயிரம் வரை கமிஷன் கொடுப்பதாகவும் கூறி உள்ளனர்.
இதை நம்பிய கங்காதரன் அவர்களிடம் 2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள் அதன்பின்னர் தரவில்லை.  இதனால் கங்காதரன் நிறுவனம் குறித்து விசாரித்தபோது, முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைதடை செய்யப்பட்ட ‘பிட்காயின்’ பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றியது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கங்காதரன் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். ஆனால் ராஜதுரை உட்பட 5 பேரும் கங்காதரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து கங்காதரன் மற்றும் முதலீட்டாளர்கள் சுமார் 20 பேர் கோபி காவல் நிலையத்தில் 5 பேர் மீதும் நேற்று புகார் அளித்தனர். இதுகுறித்து கங்காதரன் கூறுகையில், ‘ராஜதுரை உள்ளிட்ட 5 பேரும் 2 ஆயிரம் முகவர்களை நியமித்து சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்து பிட்காயின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றி உள்ளனர். அவர்களை உடனடியாக கைது செய்ய  வேண்டும்’ என்றார்.


Tags : couples , Bitcoin transaction, Rs 2,000 crore fraud, 5 couples including couple
× RELATED ஓபிஎஸ் சகோதரர் மீதான புகார் வாபஸ்