ஐசிஎப் பெண் ஊழியரை ஆபாச படம் எடுத்து மிரட்டியவருக்கு வலை

அண்ணாநகர்: சென்னை ஐ.சி.எப். தெற்கு பகுதியை சேர்ந்தவர் சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் இவர், ஐ.சி.எப்.பில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த வெள்ளைதேவன் என்பவரும் ஐ.சி.எப்.பில் வேலை பார்த்து வருகிறார். இவர், தனது பிறந்தநாள் விழாவிற்காக சாந்தியை அழைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து, வெள்ளைதேவனை தேடி வருகின்றனர்.


Tags : staffer ,intimidator ,ICF Girl Strikes Web ICF , ICF female staffer, pornographic film, intimidator, web
× RELATED போலீஸ்காரரை மிரட்டியவர் கைது