உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்திமொழி கற்பிக்கப்படாது: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி கற்பிக்கப்படாது என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சென்னையிலிருந்து செயல்படும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்பில், பிஎச்டி மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிக்கும் வகுப்புகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் திங்கட்கிழமையன்று துவக்கி வைத்தார். பின்னர், அமைச்சர் பாண்டியராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓர் உலக மொழி ,ஓர் இந்திய மொழி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertising
Advertising

மேலும் இந்தி மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதி தெலுங்கு மொழி கற்பிக்க ஒதுக்கப்படுவதாக கூறினார். மேலும் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இந்திக்கு பதிலாக தெலுங்கு கற்பிக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கனவே முடிவு செய்தபடி பிரெஞ்ச் மொழியைக் கற்பிப்பது தொடரும். இந்தி கற்பிக்க ஒதுக்கப்பட்ட மூன்று லட்ச ரூபாய் தெலுங்கு கற்பிக்க ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

Related Stories: