தமிழுக்கு துரோகம் செய்யாமல் இருங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுத்தர எடுத்த முடிவை, திமுக முன்னெடுத்த போராட்டம் காரணமாக திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன். தமிழைக் காக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள்!. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>