தலிபான்களுடன் அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தை

தோகா: கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுடன், அமெரிக்கா மீண்டும் அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக நடைபெறும் ஆப்கன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். இதற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான முயற்சிகள் கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து கொண்டிருந்தபோதே, ஆப்கனில் கடந்த செப்டம்பரில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் அமெரிக்க வீரர் பலியானார். இதையடுத்து இந்த பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டது. இந்நிலையில் தோகாவில் தலிபான்களுடன், அமெரிக்க தூதர் கலில்ஜத் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினார்.

Related Stories: