ஃபோர்டு கார் நிறுவன மிட்நைட் சர்பிரைஸ்

சென்னை: ஃபோர்டு கார் நிறுவனம் மெகா விற்பனை பிரச்சாரமான ‘மிட்நைட் சர்ப்ரைஸ்’ அறிவித்துள்ளது. கடந்த 6 ம் தேதி இந்த மெகா விற்பனை துவங்கி நடந்து வருகிறது. இன்று நள்ளிரவு வரை இந்த சலுகை திட்டம் நீடிக்கிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் பகுதியில் உள்ள ஃபோர்டு டீலர்களை அணுகலாம். இந்த மூன்று நாள் மெகா விற்பனையின் போது ஃபோர்டு கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் உள்ளன. பல்வேறு  உபகரணங்கள், மியூசிக் சிஸ்டம்கள், தங்க நாணயம் என்று துவங்கி,  விடுமுறையில் அனுபவிக்க சலுகை வவுச்சர் வரை பரிசுகள் உண்டு.

ஃபோர்டு தனது தனித்துவமான மெகா விற்பனை பிரச்சாரமான ‘மிட்நைட் சர்ப்ரைஸ்’ இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோருக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளது. 5 கோடிரூபாய் மதிப்புள்ள வசதிகள், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்காக இன்று காலை  9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும், வாடிக்கையாளர்களுக்கு டிரைவ் டெஸ்ட் மற்றும் ஃபோர்டை முன்பதிவு செய்வது மிகவும் வசதியாக இருக்கும் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>