×

என்இஎப்டி மூலம் பணம் நாள் முழுக்க அனுப்பலாம்

மும்பை: தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை (என்இஎப்டி) மூலம் பணம் அனுப்பும் வசதியை நாள் முழுவதும் விரிவுபடுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் இந்த வசதி அமலுக்கு வருகிறது. என்இஎப்டி மூலம் வங்கியின் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு பின் இந்த வசதியை பயன்படுத்த முடியாது; விடுமுறை நாளிலும் இது செயல்படாது. ஆனால் ஆண்டு முழுக்க ஒரு நாள் விடாமல் இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. தேவையான முன்னேற்பாடுகளை அனைத்து வங்கிகளும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்ெகாண்டுள்ளது.

சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என்இஎப்டி கட்டணம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம்  அறிவித்தது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் என்இஎப்டி மற்றும் ஆர்டிஜிஎஸ் முறையில் பணம் அனுப்பப்படுகிறது. என்இஎப்டி முறையில் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளும், அதற்கு மேல் ஆர்டிஜிஎஸ் முறையிலும் பணம் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, என்இஎப்டி முறையில் சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்புவதற்கான கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது எனவும், இதன் பலனை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : With NEFT, you can send money, all day
× RELATED கத்தி காட்டி பணம் பறித்தவர் கைது