இங்கிலாந்து அணியில் மீண்டும் ஆண்டர்சன்

லண்டன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியில், அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பெற்றுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேறிய ஆண்டர்சன் (37 வயது) அதன் பிறகு களமிறங்காமல் ஓய்வெடுத்து வந்தார். தற்போது காயம் முழுவதுமாகக் குணமடைந்து முழு உடல்தகுதி பெற்ற நிலையில், தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சாகிப் மகமூத் நீக்கப்பட்டுள்ள நிலையில், மார்க் வுட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அணிக்கு திரும்பியுள்ளனர். இங்கிலாந்து அணி: ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராடு, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸாக் கிராவ்லி, சாம் கரன், ஜோ டென்லி, ஜாக் லீச், மேத்யூ பார்கின்சன், ஓலி போப், டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

Related Stories:

>