கர்நாடகத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுப்பு: ஜனவரி 1ம் தேதி துவங்குகிறது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் வெளி நாட்டவர்களை பற்றிய கணக்கெடுப்பு ஜனவரி 1ம் தேதி முதல் துவங்குகிறது. இந்தியாவிலுள்ள  வெளிநாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கு  மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கர்நாடக மாநிலத்தில் வெளிநாட்டை  சேர்ந்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? இதில் எத்தனை பேர் அனுமதி இன்றி  தங்கியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதற்காக இந்த கணக்கெடுப்பு  நடைபெறுகிறது.

வருகிற ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் கர்நாடக  மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு மாநில அரசு தயாராகி வருவதாக அரசு  தரப்பில் கூறப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில்  முதல்வர் எடியூரப்பா, ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை இந்த பணிக்கு தலைவராக  நியமிக்கவும் முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் 10 லட்சத்திற்கும்  மேற்பட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வசிக்கலாம் என போலீசாருக்கு தகவல்  கிடைத்துள்ளது. பாகிஸ்தான், சூடான், வங்காள தேசம் உள்ளிட்ட வெளிநாட்டை  சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் பதுங்கி இருக்கலாம் என்பதால் மாநில அரசு  கணக்கெடுப்பு நடத்துவதற்கு தயாராகி வருகிறது. இந்த சோதனையில்போது வாக்காளர் அட்டை, டிரைவிங் உரிமம், ஆதார் உள்ளிட்டவை சோதிக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: