×

போர்வெலில் விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து ஆராய்ச்சி

சேலம்:  ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் கருவிகள் குறித்து, பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்தார். தமிழ்நாடு தீயணைப்புத்துறை மற்றும் மீட்பு பணிகள் இயக்குநர் சைலேந்திரபாபு, நேற்று சேலம் வந்தார்.  வீரர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டு, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ஆழ்துளை கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளை விரைவில் மீட்டு, உயிரிழப்பை தடுப்பதற்கு தேவையான கருவிகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதில் அண்ணா பல்கலை மற்றும் சில பல்கலைகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்,’ என்றார்.


Tags : children ,Borewell ,Falls , Falls,Borewell, Children, Research on
× RELATED 3.41 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து