×

கலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் மரணம்

திருவாரூர்: கலைஞரின் மைத்துனர் ராஜரத்தினம் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கலைஞரின் மைத்துனரும் அவரது மனைவி தயாளு அம்மாளின் அண்ணனுமான ராஜரத்தினம் (88). திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே  உள்ள கோவில் திருமாளம் கிராமத்தில் வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக  உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தார். கடந்த சில  தினங்களுக்கு முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜரத்தினம் வீட்டிற்கு  நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் நேற்று  முன்தினம் மாலை உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து ராஜரத்தினம்  இறந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு கலைஞரின் மகள் செல்வி செல்வம் மற்றும் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன்,  முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான மதிவாணன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர்  துரை சந்திரசேகரன், ராஜரத்தினத்தின்  சகோதரர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகர, ஒன்றிய செயலாளர்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அவரது உடல் அங்குள்ள  இடுகாட்டில் நேற்று தகனம் செய்யப்பட்டது.

Tags : brother-in-law ,Artist ,Rajaratnam ,death , Artist, brother-in-law, Rajaratnam, death
× RELATED 200 தொகுதிக்கும் குறையாத வெற்றியை...