புதிய கேடிஎம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது அடுத்த புதிய தயாரிப்பான சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையில் விற்பனை செய்ய ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், பஜாஜ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக்  ஸ்கூட்டர் மட்டுமல்லாமல், இதைவிட அதிக திறன் வாய்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இப்புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2021-ம் ஆண்டின்  துவக்கத்திலோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனத்தின் சார்பில் வெளியாக போவதில்லை. மாறாக, கேடிஎம் அல்லது ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இவ்விரு நிறுவனங்களில் இருந்தும் மிக அதிக திறனை  கொண்ட பைக்குகள்தான் பெரும்பாலும் வெளியிடப்படுகின்றன. இதனால், இந்நிறுவனங்களில் எந்த ஒன்றில் இருந்து அறிமுகமானாலும் இதே செயல்முறையில்தான் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களம் இறங்கும். இந்த பிராண்ட் மாற்றம்  மட்டுமின்றி, புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர், விலை என அனைத்தும் மாற்றப்படும் எனவும் கூறப்படுகிறது.

Advertising
Advertising

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்ட அதே பிளாட் பாரத்தில், அப்டேட்டாக இப்புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் எலக்ட்ரிக்  ஸ்கூட்டர் நன்மதிப்பை பெற்று வருகிறது. சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தகவல்களை மிக குறைவான அளவில்தான் பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இந்நிறுவனம் ஐபி-67 நீர் எதிர்ப்பு திறன் வாய்ந்த  லித்தியம்-இரும்பு பேட்டரி அமைப்பை பொருத்தியுள்ளது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த பேட்டரியின் சிங்கிள் சார்ஜில் 90 கி.மீ. வரை ஸ்கூட்டரை இயக்க முடியும்.ஸ்போர்ட், இகோ என இரு ரைடிங் மோட்களில் வெளியாகவுள்ள இந்த ஸ்கூட்டரின் உத்தரவாதம் மற்றுன் சர்வீஸ் கால அளவுகளை சமீபத்தில் பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்சமயம் சேத்தக் எலக்ட்ரிக் யாத்ராவில்  கலந்துகொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டர்களுக்கு துணையாக 2021ல் வெளியாகவுள்ள புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தயாரிப்பு கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா பைக்குகளின் அடிப்படையில் உருவாகி வருவது பஜாஜ் நிறுவனத்தின் மிக  அருமையான நகர்த்தல் என்கிறார்கள். எப்படி இருந்தாலும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம், எந்த விதத்திலும் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை பாதிக்காத வகையில்தான் இருக்கும் என்கிறது பஜாஜ். விலை விவரம்  அறிவிக்கப்படவில்லை.

Related Stories: