19 ஆண்டுகளில் 38 லட்சம் மாருதி ஆல்டோ விற்பனை

இந்திய மார்க்கெட்டில், மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ வரிசை கார்கள் எப்போதுமே சிறந்த விற்பனை எண்ணிக்கையை பெறுகிறது. ஆல்டோ மாடல் காரை மாருதி நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.  அன்றில் இருந்து தற்போது வரை, அதாவது கடந்த 19 ஆண்டுகளில் சுமார் 38 லட்சம் ஆல்டோ கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளது. முதல் 15 ஆண்டுகள், ஆல்டோ மாடல்தான் இந்தியாவின் மிகச்சிறந்த விற்பனை காராக விளங்கியது.  ஆல்டோ கார்களின் எண்ணிக்கை 8 வருடங்களிலேயே 10 லட்சத்தை மிக எளிதாக எட்டியது.

இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு மாருதி நிறுவனத்தில் இருந்து, புதிய ஆல்டோ வரிசை காராக, ஆல்டோ கே10 என்னும் கார், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அதிக திறன் வாய்ந்த இன்ஜினுடன் அறிமுகமானது. முதல் 10 லட்சம்  விற்பனை எண்ணிக்கையை தொட 8 வருடங்களை எடுத்துக்கொண்ட ஆல்டோ மாடல், அடுத்த 10 லட்சத்தை வெறும் 4 ஆண்டுகளில் எட்டிவிட்டது. ஆல்டோ மாடல் விற்பனை, 2016-ல் 30 லட்சம் என்கிற மைல்கல்லை எட்டியது.இந்திய கார் மார்க்கெட்டில் கடந்த 19 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் ஆல்டோ மாடல் குறித்து, மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷஷான்க் வஸ்தாவா கூறுகையில், ‘’கம்பெக்ட் டிசைன், அதிக எரிபொருள் திறன்,  அப்டேட்டான பாதுகாப்பு அம்சங்களால் முதன்முறையாக கார் வாங்க நினைப்போருக்கு, முதல் தேர்வாக ஆல்டோ மாடல் உள்ளது’ என்றார்.

Related Stories: