×

உயர் அதிகாரி மனைவியிடம் போனில் பேசிய ஏட்டுக்கு முகத்தில் கும்மாங்குத்து

விழுப்புரம் மதுவிலக்குஅமல்பிரிவு அதிகாரியாக கோவன அதிகாரி உள்ளார். ஏற்கனவே இதே மாவட்டத்தில் பல இடங்களில் பணியாற்றியவர், ஓய்வுபெறும் நிலையில் கல்லாகட்டும் துறையை தேடிபிடிச்சி வாங்கியிருக்காறாம். புதுவை அருகே  திருசிற்றம்பலம் கூட்டுரோட்டில் வீடுகட்டியுள்ள அவர் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கித்தரும் பொறுப்பை ஒவ்வொரு செக்போஸ்ட்டிற்கும் பிரித்து கொடுத்துள்ளாராம். காய்கறி, மளிகைசாமான், மீன் என்று வாரந்தோறும் பட்டியல்  போட்டு கொடுத்துள்ளாராம். இந்நிலையில் கிளியனூர் செக்போஸ்ட் ஏட்டை அழைத்து வீட்டுக்கு காய்கறி வாங்கிவைப்பான்னு சொல்லிட்டு அதிகாரி சென்றுவிட்டாராம்.

காய்கறியோடு நின்றிருந்த காெமடி நடிகர் பெயரைக்கொண்ட அந்த ஏட்டு,  நேரா அதிகாரியின் மனைவிக்கு போன் அடிச்சிட்டு வீட்டுக்கு போயிட்டாராம். மனைவியோ கணவரிடம் பத்தவைக்க, உடனடியாக வந்த அதிகாரி, நீ எப்படி என் மனைவிக்கு போன்பண்ணலாம், நம்பர் எப்படி கிடைத்தது என்று சந்தேகப்பட்டு,  ஏட்டுவை பிடித்து முகத்திலே சரமாரியாக குத்தியுள்ளாராம். அக்கம்பக்கத்தினரும் இதனை பார்க்க அழுகுரலோடு வௌியேசென்ற ஏட்டுவுக்கு கைநிறைய பணத்தை கொடுத்து ஆஸ்பிட்டலுக்கும் போகச் சொல்லியிருக்காறாம் அந்த காவல்  அதிகாரி.

Tags : Cumming , phone , high-ranking ,wife Cumming, face
× RELATED யானை தாக்கி விவசாயி பலி