×

சென்னை மாவட்ட தடகளம் அரசுப்பள்ளிகள் அசத்தல்

சென்னை: சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த  பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி,  மாநகராட்சிப் பள்ளி மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடையிலான  தடகளப் போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.  400 மாணவிகள்  உட்பட  800க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின்  யு-17  பிரிவில் வெங்கடேஷ்,  ஜீவா, சபா முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர். அதுபோல்,  1,500 மீட்டர் பெண்களுக்கான யு-17 ஓட்டப்பந்தயத்தில் அபிதா,  கிரேசி, தேன்மொழி முதல் 3  இடங்களை வசப்படுத்தினர்.யு-19  மாணவர்களுக்கான  1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஷாம் குமார் தங்கப்பதக்கம் வென்றார்.  மகேந்திரன் வெள்ளி, உக்கிரபாண்டி வெண்கலம் வென்றனர். யு-19 மாணவி
களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தர்ஷா முதலிடத்தையும், பூமிகா 2வது இடத்தையும், ரமணி 3வது இடத்தையும் பிடித்தனர்.

மாணவர்களுக்கான குண்டு எறிதல் யு-17 பிரிவில் அண்ணாமலை, ஜீவா, மகேஷ் முதல் 3 இடங்கள் பிடித்தனர். யு-17 மகளிர் குண்டு எறிதல் போட்டியில் பரமேஸ்வரி, விமலா, சுகன்யா ஆகியோர் முதல் 3 இடங்களை வென்றனர். வெற்றி பெற்றவர்
களுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்செல்வன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.Tags : Athletics Government Schools ,Chennai District , Chennai District ,Government ,Schools
× RELATED ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு...