டேபிள் டென்னிஸ் பிஎஸ் மேனிலைப்பள்ளி சாம்பியன்

சென்னை: கோபாலபுரம் டிஏவி பள்ளியில் நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியில், மொத்தம் 21 பள்ளிகளில் இருந்து 19 சிறுவர்கள் அணியும், 12 சிறுமிகள் அணியும் பங்கேற்றன. ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், மயிலாப்பூர் பிஎஸ் மேனிலைப்பள்ளி மாணவிகள் ஹ்ருத்திகா - ஹாசனி இணை, சங்கரா  மேனிலைப்பள்ளி மாணவிகள் தீக்‌ஷா - அனன்யா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

மாணவர்கள் பிரிவில், ஒட்டுமொத்தமாக குழு அடிப்படையில் முகப்பேர் டிஏவி பள்ளி மாணவர்கள் கவின் மோகன், அஷ்மித் கிருஷ்ணா, ராஜ்குமார், ஜஸ்வந்த், சஞ்ஜெய் ஆகியோர் முதலிடத்தையும், இந்து சீனியர் மேனிலைப்பள்ளி  மாணவர்கள் ராம், மோகன், தருண் நாராயண், ஆகாஷ் ராஜ்வேலு ஆகியோர் 2வது இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு டேபிள் டென்னிஸ் வீரர் நிதின் நாராயணன் பரிசுகளை வழங்கினார்.Tags : Table Tennis BS Mainstream Champion ,BS Mainland Champion , Table tennis, BS Mainland, Champion
× RELATED டேபிள் டென்னிஸ்: சித்கரா சாம்பியன்