×

தேனி அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்: நிர்வாக வசதிக்காக பகுதிகள் பிரிப்பு

சென்னை: தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் எம்.செல்லமுத்து, தேனி மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருக்கும் கெங்குவார்பட்டி எஸ்.சேகர், கடலூர் நகர அதிமுக செயலாளர் பொறுப்பில் இருக்கும்  சி.சோலைராஜ் ஆகியோர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளாக ஜி.பொன்னுபிள்ளை முன்னாள் எம்எல்ஏ (போடிநாயக்கனூர் தொகுதி), மாட்ட பொருளாளர் - சி.சோலைராஜ் (கடலூர் நகரம்), தேனி மாவட்ட இணை செயலாளர் - ஏ.கே.அப்துல்காதர் ஜெய்லானி  (உத்தமபாளையம் பேரூராட்சி), தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் - எஸ்.சேகர் (கெங்குவார்பட்டி, பெரியகுளம் ஒன்றியம்), கடலூர் நகர அதிமுக செயலாளர் - என்.எஸ்.கே.கே.ஆர்.அருண்குமார் (எல்லைத்தெரு) ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாக வசதிக்காக  பெரியகுளம் கிழக்கு ஒன்றியம், பெரியகுளம் மேற்கு ஒன்றியம், ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியம், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியம், கடமலை-மயிலை வடக்கு ஒன்றியம், கடமலை-மயிலை தெற்கு  ஒன்றியம், உத்தமபாளையம் வடக்கு ஒன்றியம், உத்தமபாளையம் தெற்கு ஒன்றியம் என பிரிக்கப்படுகிறது.



Tags : executives ,Theni AIADMK ,areas , Theni ,AIADMK , abolishment:,convenience
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்