மொத்த பயனாளிகள் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்வு 1000 பஸ் பாஸ் ஒரே மாதத்தில் 20 ஆயிரம் பேர் வாங்கினர்: விற்பனையை மேலும் அதிகரிக்க எம்டிசி திட்டம்

சென்னை: ‘எம்டிசி’யில் விநியோகம் செய்யப்படும் 1,000 பாஸ்க்கு பயணிகளிடத்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது.  சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு (எம்டிசி) சொந்தமாக 33 இடங்களில் பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல்வேறு வழித்தடங்களில் சுமார் 3,200க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும்  27 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முன்னதாக 30 லட்சம் வரையில் பயணிகள் பஸ் சேவையை பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால், பலரும் ரயில் பயணத்திற்கு சென்று விட்டனர். இதையடுத்து, பயணிகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும், மேலும் அதிகரிக்கும் வகையிலும் 1,000 மதிப்பிலான பஸ் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. பயணச்சீட்டு ஒன்றுக்கு 1,000 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டால், சாதாரண பஸ்,  டீலக்ஸ் பஸ், எக்ஸ்பிரஸ் என அனைத்திலும் பயணிக்க முடியும். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரையில் மாந்தோறும் 1.10-1.20 லட்சம் வரையிலான பஸ் பாஸ்கள் விற்பனையான நிலையில், தற்போது 1.40 லட்சம் பேர், 1000 மதிப்பிலான பாஸை பயன்படுத்தி வருகின்றனர். இதை மேலும் அதிகரிக்க  தேவையான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து ேபாக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பஸ்களில் பயணிப்போரின் வசதிக்காக ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகள், தனியார்  தொழில்நுட்ப பயிலகங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கப்படுகிறது. இதேபோல் நாடகக்கலைஞர்கள், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்ஒருபகுதியாக தினந்தோறும் அலுவலகம் செல்ேவாரின் வசதிக்காக ₹1,000 மதிப்பிலான பாஸ் அறிமுகம்  செய்யப்பட்டது. இது மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுவோரை குறி வைத்தே கொண்டுவரப்பட்டது.

திட்டமிட்டபடி இந்த பஸ் பாஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வரை மாந்தோறும் 1.10 லட்சம் முதல் 1.20 லட்சம் பேர் வரை பயன்படுத்தி வந்தனர். தற்போது பாஸ் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை  அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி தற்போது 1.40 லட்சம் பேர் பஸ் பாஸ் எடுத்துள்ளனர். இதை மேலும் அதிகரிக்கும் வகையில், ஆங்காங்குள்ள பஸ் ஸ்டாண்டுகளில் சம்மந்தப்பட்ட பஸ் பாஸ் குறித்து மக்கள்  அறிந்துகொள்ளும் வகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதைப்பார்த்து பலரும் புதிய பாஸ்களை வாங்கி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: