×

வழிகாட்டி நெறிமுறை கொண்டு வருவதற்கு பதிலாக தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் மீண்டும் கொண்டு வர முடிவு

* உயர்மட்ட, தொழில்நுட்ப குழு அமைப்பு
* 3 மாதங்களில் சட்டம் அமலுக்கு வரும்

சென்னை: தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை 3 மாதங்களுக்குள் அமலுக்கு வருகிறது. இதற்காக, உயர்மட்டக்குழு, தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் ஒவ்ெவாரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு வணிக பயன்பாடு காரணமாக நிலத்தடி நீர் தொடர்ந்து அதிகளவில் உறிஞ்சப்பட்டு வருவதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இப்படியே  சென்றால் வரும் 2020ல் நிலத்தடி நீர் குறைந்து, அதை பயன்படுத்துவதே சிரமமான காரியமாகி விடும். இதை தடுக்க தான், கடந்த 2003ல் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்ைம சட்டம் ெகாண்டு வரப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த சட்டம் திரும்ப பெறப்பட்டது. தொடர்ந்து கடந்த 2014ல் வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் எடுக்க தடையில்லா சான்று பெற வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. அதில், அதி நுகர்வு,  அபாயகரமான பகுதி, பாதுகாப்பான பகுதி, உப்பு மோசமான தரம் பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அதி நுகர்வு, அபாயகரமான 464 பகுதிகளில் வணிகபயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் எடுக்க தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நிலத்தடி நீர் திருட்டை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நிலத்தடி நீர் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க முடிவு செய்யப்பட்டது. எனவே.  மீண்டும் தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, உயர்மட்டக்குழு, தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர் மட்டகுழுவில் தலைமை செயலளார்  சண்முகம் தலைமையில் அரசு செயலாளர் மணிவாசன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொழில்துறை, ஊரகவளர்ச்சித்துறை வேளாண்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை, வீட்டு வசதித்துறை, நிதித்துறை உள்ளிட்ட 11 பேர் கொண்ட  குழுவினரும், தொழில்நுட்ப குழுவில் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நிலத்தடி நீர் விவர ஆதார குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகர் உட்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தொழில்நுட்ப குழுவினர் சார்பில் நிலத்தடி நீர் சட்டத்தில் கொண்டு வரப்படவுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள். குறிப்பாக, நிலத்தடி நீர் திருடினால் தண்டனை மற்றும் அபராதம், நிலத்தடி நீர் எடுக்க  கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை  கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த சட்டம் முழுமையாக வரையறுக்கப்பட்டு, உயர் மட்ட குழு முன்பு வைக்கப்படுகிறது. அந்த குழுவில் ஒப்புதல் பெறப்பட்டவுடன்  சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : bringing, guide protocol, Tamil Nadu ,Ground Water Act
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...