மதிப்பை குறைத்து பதிவுக்கு அனுப்பியதால் அரசுக்கு இழப்பு தனித்துணை ஆட்சியர்கள் ஒரு வாரத்தில் அறிக்கையை அளிக்க வேண்டும்: பதிவுத்துறை பொறுப்பு ஐஜி உத்தரவு

சென்னை: வழிகாட்டி மதிப்பை குறைத்து பதிவுக்கு அனுப்பியதால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தனித்துணை ஆட்சியர்கள் ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும்  என்று பதிவுத்துறை பொறுப்பு ஐஜி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 578 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கடந்த 2012ல் அமலுக்கு வந்த வழிகாட்டி  மதிப்பின் அடிப்படையில் சொத்து மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வழிகாட்டி மதிப்பின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகபட்சமாக இருப்பதாக கூறி பதிவுக்கு வந்த பொதுமக்கள் குறைத்து மதிப்பை நிர்ணயம் செய்யக்கோரி விண்ணப்பிக்கின்றனர். அந்த விண்ணப்பங்கள் தனித்துணை  ஆட்சியர்களிடம் அளிக்கப்படுகிறது. அவர்கள் விண்ணப்பங்களை பரிசீலித்து கட்டணம் நிர்ணயிக்கின்றனர். அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் பெரும்பாலும் குறைத்து தான் பதிவுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதே நேரத்தில்  வழிகாட்டி மதிப்பை குறைக்க விண்ணப்பித்த மனுக்கள் ஏராளமானவை இன்றளவும் முடிவு எட்டப்படவில்லை. குறிப்பாக, கடந்த 2014 முதல் தற்போது வரை 25,582 ஆவணங்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால்,  பதிவுத்துறைக்கு ₹251 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பதிவுத்துறை பொறுப்பு ஐஜி அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள், டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய முத்திரை  சட்டப்பிரிவு 47ஏ கீழ் அதிக அளவிலான ஆவணங்கள் மதிப்பு நிர்ணய நடவடிக்கைக்காக நிலுவையில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில நிலுவையில் உள்ள இனங்கள் குறித்து  வணிகவரி, பதிவுத்துறை முதன்மை செயலாளரால் தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய தனித்துணை ஆட்சியர்கள் சீராய்வு செய்யப்பட்டு அதன் முடிவில் துறையின் குறைபாடுகள் சுட்டிகாட்டப்பட்டு அதனை  களைய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.* தனித்துணை ஆட்சியர்களிடம் இருக்கும் தேவை (demand), கலெக்ஷன் (collection), பேலன்ஸ் (balance) புள்ளி விவரங்கள் உண்மை தன்மையை பிரதிபலிப்பதாக இல்லை. எனவே, சரிகட்டல் பணி மேற்கொண்டு சரியான விவரத்தினை ஒரு  வார காலத்திற்குள் சமர்பிக்க கோரப்படுகிறது.

* கிரயம் பெறுபவரின் அலைபேசி எண்ணை பெறாமல் அவர்களின் முகவர்கள் எண்ணை பெறுவதால் மதிப்பு நிர்ணய நடவடிக்கையில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, ஆவணப்பதிவின் போது கிரயம் பெறுவர்களின் அலைபேசி தானா  என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

* தனித்துணை ஆட்சியர்கள் விசாரணையின் போது ஆவணதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, அநேக நிகழ்வுகளில் வழக்கினை ஒத்தி வைக்கப்படுவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதன் தொடர்பான நிலுவையினை குறித்து  டிஐஜிக்கள் மாதம் இருமுறை சீராய்வு செய்யப்பட வேண்டும். நிலுவையினை குறைக்க துரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: