×

ஆசிரியர்களுக்கு எதிராக நித்தியானந்தா குதர்க்க கேள்வி

புதுடெல்லி: ‘‘ஒரு ஆசிரியரால் அனைத்து பாடங்களையும் கற்பிக்க முடியாதபோது, ஒரு மாணவனால் மட்டும் எப்படி அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்?’’ என்று நித்தியானந்தா குதர்க்கமாக கேள்வி எழுப்பி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி கைலாசா’ என்று பெயரிட்டு, தனிநாடு அந்தஸ்து கோரி ஐநா.வில் விண்ணபித்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவர் அப்படி எந்த தீவையும் வாங்கவில்லை என்று ஈகுவடார் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒரு ஆசிரியரால் அனைத்து பாடங்களையும் எழுத முடியவில்லை. ஒரு ஆசிரியரால் அனைத்து பாடங்களையும் கற்பிக்க முடியவில்லை. அப்படியானால், ஒரு மாணவனால் மட்டும் எப்படி அனைத்து பாடங்களையும் படிக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பும் நித்தியானந்தாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Tags : Nithyananda ,teachers , Teachers, Nithyananda, guttural question
× RELATED பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா...