×

கோவை வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை வெள்ளியங்கிரி மலையில் மகா கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திண்டுக்களை சேர்ந்த சரவணன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக தீபம் ஏற்றி வழிபாடு நடந்த நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது என வனத்துறை தெரிவித்துள்ளது.


Tags : HC , Coimbatore, Veliyangiri Hill, Maha Karthikam Deepam, Worship, Petition
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...