×

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9 ம் தேதி முதல் 16ம் தேதி வரை  நடைபெறும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் டிசம்பர் 19ம் தேதி ஆகும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

Tags : body elections ,districts ,9th District Held: Election Commission , In Tamil Nadu, in all 27 districts, excluding 9 districts, local government elections, Dec. Interview with Election Commissioner, to be held on 27th and 30th
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்