குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புளளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலோர மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 6 செ.மீ., திருப்பூண்டி, திருத்துறைப்பூண்டியில் தலா 5 செ.மீ., காரைக்கால், புதுக்கோட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் குமரிக் கடல் பகுதியல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பலத்த காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: