ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 5 கட்ட பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவம்பர் .30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது.

ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில் மட்டும் காலை 7மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5மணி வரை தேர்தல் நடைபெறும். இதர 18 தொகுதிகளில் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 42 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  ந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related Stories: