மயிலாப்பூர் பிரபல கேஎப்ஜெ நகைக்கடையில் பல கோடி மோசடி

சென்னை: பிரபல கேரளா நகைக்கடையில் தங்க நகை சேமிப்பு திட்டத்தில் மோசடி நடந்துள்ளது. கேரளா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செல்படும் பிரபல நகைக்கடை சென்னையில் மயிலாப்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர் பகுதிகளில்  இயங்கி வருகிறது. இந்த நகைக்கடையில் தங்க நகை சேமிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை பணத்தை  செலுத்தி தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். இந்த நகைக்கடை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிய வந்ததாக கூறப்படுகிது. இதற்கிடையே தங்க நகை சேமிப்பு திட்டத்தில் பணம் கட்டியவர்களுக்கு முதிர்வு தொகையை நகைக்கடை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சிலருக்கு மயிலாப்பூர் நகைக்கடை கிளையில் இருந்து காசோலைகள் வழங்கப்பட்டது. அந்த காசோலைகளை வங்கியில் செலுத்திய போது, அதுவும் பணம் இல்லாமல் திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள நகைக்கடையை முற்றுகையிட்டனர்.  இதனால் பாதிக்கப்பட்டர்கள் தனித்தனியாக பிரபல நகைக்கடை மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து மயிலாப்பூர் நகைக்கடையில் போலீசார், மோசடி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தங்க நகை சேமிப்பு திட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பல கோடி ரூபாய் முதிர்வு பணம் மற்றும் நகைகள் திரும்பி தராமல் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மோசடி குறித்து பிரபல நக்கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: