கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் எனது பெயரை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்

சென்னை: கபாலீஸ்வரர் கோயிலுக்கு எனது பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்ட நபர் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அது ெவறும் புரளியென தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் கடிதத்தில் இருந்த முகவரியை வைத்து சைதாப்பேட்டையை சேர்ந்த முஹம்மது ஹனீப் பாகவி என்பவரது வீட்டுக்கு சென்று, அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, மிரட்டல் கடிதத்திற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டாதவர்கள் யாரோ என் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர் என்று கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார்.

இருந்தாலும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மிரட்டல் கடிதம் அனுப்பியதாக கூறப்படும் முஹம்மது ஹனீப் பாகவி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கடிதத்தில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை. யாரோ திட்டமிட்டு எனது பெயரை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: