போக்சோ குற்றவாளிகளின் கருணை மனுவை ஏற்க கூடாது

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசுகையில், ‘‘பெண்கள் பாதுகாப்பு மிக முக்கியமான விஷயம். இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியலமைப்பில் குற்றவாளிகள் கருணை மனு செய்ய அரசிலமைப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு இத்தகைய உரிமையை தரக்கூடாது. அந்த உரிமையை பறிக்க வேண்டும். சிறுமிகளுக்கு எதிரான பயங்கர தாக்குதல்கள் நாட்டின் மனசாட்சியையே உலுக்குகின்றன. எனவே சிறு வயதிலேயே தங்கள் ஆண் குழந்தைகள் மனதில் பெண்களுக்கு மரியாதை தர வேண்டுமென்ற எண்ணத்தை விதைக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை’’ என்றார்.

நிர்பயா கொலையாளி கருணை மனு நிராகரிக்க பரிந்துரை: டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் கொலையில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் வினய் ஷர்மா என்பவன் தண்டனையை குறைக்கக் கோரி கருணை மனு விண்ணப்பித்துள்ளான். இதனை டெல்லி துணை நிலை ஆளுநர் நிராகரித்துள்ளார். இறுதி முடிவுக்காக கருணை மனுவை ஜனாதிபதிக்கு உள்துறை அமைச்சகம் தற்போது அனுப்பி வைத்துள்ளது. இந்த மனுவை நிராகரிக்கும் படி உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

Tags : Paxo , Paxo Criminals, Petition
× RELATED நிர்பயா வழக்கில் கருணை மனு...