×

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 8ம் தேதி (ஞாயிற்று கிழமை) மாலை 5.00 மணி அளவில், சென்னை, தியாகராயர் நகர், ‘ஓட்டல் அக்கார்டு’ல் உள்ள அரங்கில் நடைபெறும். அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனக்கூறப்படுகிறது.

Tags : DMK ,District Secretaries , Chief of Stalin, DMK District Secretaries Meeting
× RELATED திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் ஆலோசனை