டுமீல் ஸ்பெஷலிஸ்ட்’ சஞ்சனார்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சஞ்சனார்  1996ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடப்பா மாவட்டம். புலிவெந்துலா ஏஎஸ்பியாகவும் தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்ட எஸ்பியாகவும், மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு க்ரேவுன்ஸ் கமாண்டராகவும், வாரங்கல் எஸ்பியாக தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். தற்போது சைபராபாத் காவல்துறை ஆணையாளராக பணிபுரிந்து வருகிறார். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக பெயர் கொண்ட சஞ்சனார் ஏற்கனவே கடப்பா மாவட்டத்தில் ஒரு என்கவுண்டர்,  மாவோயிஸ்டுகள் பிரிவு சிறப்பு கமாண்டராக பணிபுரிந்தபோது மாவோயிஸ்டுகளை என்கவுன்டர் செய்தார். 2008ம் ஆண்டு வாரங்கள் மாவட்ட எஸ்பியாக பணிபுரிந்தபோது பிடெக் படிக்கும் மாணவிகள் 2 பேர் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 3 மாணவர்களை சஞ்சனார் என்கவுன்டர் செய்து சுட்டுக் கொன்றார். இந்த சம்பவத்தின் மூலம் சஞ்சனாருக்கு நாடு முழுவதும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிஷா வழக்கிலும் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் குற்றம் நடந்த நாட்களில் இருந்து நாடு முழுவதும் கோரிக்கை விடுத்து வந்த வந்தனர். அவரது மனைவிக்கும் பல ஐபிஎஸ் அதிகாரிகளும் போன் செய்து டிஷா வழக்கில் எதற்காக சஞ்சனார் பொறுமை காத்து வருகிறார் ஏற்கனவே ஆசிட் வழக்கில் எவ்வாறு என்கவுன்டர் செய்தாரோ அதேபோல் இதிலும் செய்ய வேண்டும் என அழுத்தம்  கொடுத்துள்ளனர். மேலும் சமூக வலைதளங்களிலும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் இந்த நான்கு பேரையும் அவரது ஸ்டைலில் என்கவுண்டர் செய்ய வேண்டும் என ஆதரவு தெரிவித்து வந்தனர்.  கடந்த 9 நாட்களாக தனது காவல்துறை ஆணையகம் உள்ள கட்சிபவுளிக்கு செல்லாமல் செம்ஷாபாத்தில் இருந்தபடியே டிஷா  கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று என்கவுண்டர் சம்பவத்திற்கு பிறகு நிருபர்களிடம் கூறுகையில் போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என கூறி தனது அழைப்பை துண்டித்துள்ளார். கடந்த 9 நாட்களாக சஞ்சனாருக்கு  சமூக வலைத்தளங்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களிடம் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்த நிலையில் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் தனது ஸ்டைலில் குற்றம் செய்பவர்களுக்கு உரிய தண்டனையை வழங்கி இருப்பதாகவும் மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க இந்த என்கவுண்டர் உள்ளது என்று சஞ்சனாரை பாராட்டு மழையில் மீம்ஸ் போடுபவர்கள் புகழ்ந்து வருகின்றனர். மேலும் திரைப்பட உலகத்தினரும்,  பல அரசியல் கட்சியினரும், ஆளும் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: