இந்திய அணியின் 2021 ஆஸி. டூரில் 2 பகல்/இரவு டெஸ்ட்?

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 2021ம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகமாகி உள்ள நிலையில், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, வங்கதேச அணிகளுடன் நடந்த டெஸ்ட் தொடர்களில் ‘ஒயிட்வாஷ்’ வெற்றிகளை வசப்படுத்தி அசத்திய இந்திய அணி, சமபலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராகவும் அசத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertising
Advertising

குறிப்பாக, இந்திய அணி 2021ல் ஆஸ்திரேலியா சென்று விளையாட உள்ள டெஸ்ட் தொடர் மிகுந்த சவாலானதாக இருக்கும். இந்த தொடரின்போது, இந்திய அணி குறைந்தபட்சம் 2 பகல்/இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அடுத்த மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும்போது, ஆஸி. கிரிக்கெட் வாரியத் தலைவர் ஏர்ல் எட்டிங்ஸ் மற்றும் நிர்வாகிகள் இது குறித்து பிசிசிஐ உடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட பகல்/இரவு டெஸ்ட் போட்டி கொண்ட முதல் தொடராக இது வரலாற்று முக்கியத்துவம் பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: