சென்னையில் ஒருநாள் போட்டி டிக்கெட் நாளை விற்பனை

சென்னை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே  டிச. 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் காலை 10.30 மணி முதல் சேப்பாக்கம்  விக்டோரியா விடுதி சாலையில் உள்ள டிஎன்சிஏ அலுவலக பூத்களில் டிக்கெட்களை வாங்கலாம். குறைந்தபட்ச விலை 1200. இது தவிர 2400, விருந்தினர் தளங்களுக்கு 4000, 4800, 6500, 8000, 12,000 விலைகளிலும் டிக்கெட் விற்கப்பட உள்ளன.

நேரில் மட்டுமின்றி www.paytm.com அல்லது  www.insider.in  என்ற இணையதளங்கள் மூலமாகவும் வாங்கலாம்.  ‘ஒருவருக்கு அதிகபட்சமாக 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். அனுமதிக்கப்பட்ட பூத்களை தவிர்த்து வேறு நபர்களிடம் இருந்து வாங்கும் டிக்கெட்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது ’ என்று டிஎன்சிஏ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>