பாகிஸ்தான் யு-19 அணியில் 14 வயது சிறுவன் தேர்வு

கராச்சி: ஐசிசி யு-19 உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் அணியில் 14 வயது ஆல் ரவுண்டர் முகமது ஷாஷத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்த தொடருக்கான் பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான 16 வயது இளம் வேகம் நசீம் ஷா, 14 வயது ஆல் ரவுண்டர் முகமது ஷாஷத் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் யு-19 அணி: ரோகைல் நசீர் (கேப்டன்), அப்துல் வாகித், ஹைதர் அலி, முகமது ஷாஷத், முகமது ஹாரிஸ், முகமது ஹுரைரா, முகமது இர்பான் கான், அப்பாஸ் அப்ரிடி, பகத் முனிர், காசிம் அக்ரம், ஆமிர் அலி, அரிஷ் அலி கான், ஆமிர் கான், நசீம் ஷா, தாஹிர் உசேன்.

Related Stories:

>