உபி.யில் திருமண நிகழ்ச்சியில் கொடூரம் நடனம் ஆடுவதை நிறுத்திய பெண் மீது துப்பாக்கிச்சூடு : வைரல் வீடியோவால் பரபரப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்த பெண், திடீரென ஆட்டத்தை நிறுத்தியால் துப்பாக்கியால் சுட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம், சித்ரகூட் கிராம பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் சுதிர்சிங் படேல். இவரது மகளின் திருமண நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மேடையில் ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதில் பங்கேற்று ஆடிய ஒரு பெண் திடீரென தனது ஆட்டத்தை நிறுத்தினார். இதனால், ஆத்திரம் அடைந்த மணப்பெண்ணின் உறவினர், போதையில் மீண்டும் ஆடுமாறும் குரல் எழுப்பினார்.

இதனால், வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் திடீரென அந்த நபர் நடனமாடிய இளம்பெண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அந்த பெண் படுகாயமடைந்தார். அந்த பெண்ணின் பெயர் ஹீனா (22) என தெரியவந்துள்ளது. மணப்பெண்ணின் உறவினர்கள் மிதிலேஷ், அகிலேஷ் ஆகியோரும் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டவரை வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஒரு நிமிடம் ஓடக்கூடிய வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரை கைது ெசய்துள்ளனர். காயம் அடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : Ubisi Woman ,Up , Woman shot dead ,Up
× RELATED துணி காயவைத்த போது மின்சாரம் தாக்கி பெண் பலி