×

வளிமண்டல காற்று சுழற்சி கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும்

சென்னை: குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும் குமரிக் கடல் பகுதியல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சியால் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 80 மிமீ மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் 40 மிமீ, பாம்பன் 30 மிமீ, ராதாபுரம் 20 மிமீ, கன்னியாகுமரி 10 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில் குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல மேல்அடுக்கில் காற்று சுழற்சி நிலை கொண்டு  இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

Tags : districts , Atmospheric wind circulation,causes rain , coastal districts
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை