உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதல்வருடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

* முடிவு எடுக்க முடியாமல் திணறல்

* அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து முதல்வர், தலைமைச் செயலாளருடன் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த தடையில்லை என்று தெரிவித்தது. புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகளை முடித்து நான்கு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை திரும்பப்பெறப்பட்டு விட்டதாக, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு தொடர்பாக தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதனை தொடர்ந்து தலைமை செயலாளருடன் மாநில தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணைய செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக நேற்று இரவு முதல்வருடன் தலைமை செயலாளர், மாநில தேர்தல் ஆணையர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் மீண்டும் உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையைறை பணிகளை எவ்வாறு மேற்கொள்வது. தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பல ஆலோசனை கூட்டங்களை நடத்திய பின்பும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் மாநில தேர்தல் ஆணையம் திணறிவருகிறது.

Related Stories: