மத்திய உள்துறை அமைச்சக பாதுகாப்பு ஆலோசகராக விஜய குமார் நியமனம்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை இயக்குனராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார். இவர் தேசிய போலீஸ் அகடமி இயக்குனர் மற்றும் தமிழக சிறப்பு போலீஸ் அதிரடிப்படை தலைவராகவும் பணியாற்றியவர். இவர் தலைமையிலான அதிரடிப்படை தான் சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றது. 1975ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிஆர்பிஎப் இயக்குனராக இருந்தபோது கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர், முன்னாள் காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் தீவிரவாத பாதிப்புள்ள மாநிலங்களின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கு இந்த பதவியை வகிப்பார்.

Tags : Vijaya Kumar ,Defense Advisor ,Home Ministry , Vijaya Kumar appointed ,Home Ministry's Defense Advisor
× RELATED தேசிய மக்கள் பதிவேடு விவகாரம் தலைமை...