வர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு

பீஜிங்: அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில சோயாபீன்ஸ் வகைகள், பன்றி இறைச்சிக்கு சீனா வரிச்சலுகை அறிவித்துள்ளது.

உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் அமெரிக்கா -சீனா இடையே கடந்த ஒரு ஆண்டாக வர்த்தக போர் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக இரு நாடுகளும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரியை விதித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகத்தில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரு பொருட்களுக்கு சீனா வரிச்சலுகை அறிவித்துள்ளது.

அமெரிக்க தூதர்களுக்கு கட்டுப்பாடு கடந்த அக்டோபரில் சீன தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதேபோன்ற நடவடிக்கையை தற்போது சீனா மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாக ஹூவா சுனிங் கூறுகையில், “சீனாவில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் குறித்து அமெரிக்க தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளை சந்திப்பதற்கு முன்னதாக வெளியுறவு அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கடந்த அக்டோபரில் சீன தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட வாஷிங்டன்னின் முடிவுக்கான எதிர்நடவடிக்கையாகும். அமெரிக்கா தனது தவறுகளை சரிசெய்யவும், அது தொடர்பான விதிகளை திரும்ப பெறவும் மீண்டும் வலியுறுத்துகிறோம்,” என்றார். 

Related Stories:

>