அமித்ஷா விருப்பப்படி சிஆர்பிஎப்.பில் அதிரடி மாற்றம் தீவிரவாதிகள், நக்சலை ஒழிக்க 35 வயதுக்குட்ட இளம் வீரர்கள் : மற்றவர்களுக்கு எளிதான பணி வழங்க பரிந்துரை

புதுடெல்லி: தீவிரவாதிகள், நக்சலைட்களுக்கு எதிராக போராடும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் இளைஞர்களை நியமிக்கும்படியும், வயதானவர்களை வேறு பணிகளுக்கு மாற்றும்படியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உள்நாட்டு பாதுகாப்பு படையில் துடிப்புமிக்க இளைஞர்களை படையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு அலுவலக பணி உள்ளிட்ட எளிதான பணியை வழங்கவும் அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக சிஆர்பிஎப் சார்பில் சிறப்பு இயக்குனர் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தீவிரவாதம், நக்சலைட்டுகளுக்கு எதிராக போரிடுவதற்கு ஏற்ற வயதுடையவர்கள் குறித்து அறிக்ைகயை தயார் செய்துள்ளனர். இந்த அறிக்கை வரும் 15ம் ேததி தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து இந்த படை அதிகாரிகள் கூறியதாவது: தீவிரவாதம், நக்சலைட்களுக்கு எதிராக போரிட 35 வயதுக்கு உட்பட்ட வீரர்களை சிஆர்பிஎப் இனிமேல் ஈடுபடுத்தவும், இந்த வயதுக்கு மேற்பட்டவர்களை அதே பிரிவில் இலகுவான பணிகளை வழங்குவது எனவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், இவர்களை மத்திய தொழிற்பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை, விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை போரிடுவதற்கு ஏற்ற திறமை உடையவர்களாக வைத்திருக்கவும், நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மாவோயிஸ்ட்கள், காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு எதிராக போரிடுதல், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக போராடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பல முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, சிஆர்பிஎப்.பிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை அமல்படுத்தினால்தான் வீரர்கள் போரிட முழு தயார் நிலையில் உள்ளவர்களாக இருப்பார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: