×

ஜார்க்கண்டில் இன்று 2ம் கட்ட வாக்குப்பதிவு : 42 ஆயிரம் பேர் பாதுகாப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளில் இன்று 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. இன்று 20 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில், 260 வேட்பாளர்களின் தலைவிதியை, 47 லட்சத்து 24 ஆயிரத்து 968 வாக்காளர்கள் தீர்மானிக்கின்றனர். ஜாம்ஷெட்பூர் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் நடக்கிறது. மற்ற 18 தொகுதிகளில் மாலை 3 மணி வரை தேர்தல் நடைபெறும்.

இதற்கான பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர் 42 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 23ம் தேதி நடைபெற உள்ளது. ஜார்க்கண்டில் தற்போது பாஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரகுபர்தாஸ் உள்ளார். இங்கு பா.ஜ மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா, இல்லையா என்பது வரும் 23ம் தேதி தெரியும். இருப்பினும், கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என கூறப்பட்டு வருகிறது.  


Tags : Jharkhand , Polling in Jharkhand today, Security for 42 thousand
× RELATED அமலாக்கத்துறை கைதை எதிர்த்து...