குற்றவாளிகளை சுட்டுக்கொன்றது சரி: பிரேமலதா

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தெலங்கானாவில் பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற 4 குற்றவாளிகளை அம்மாநில போலீசார், சுட்டுக்கொன்றது நல்ல விஷயம். இதுபோன்று தண்டனை கடுமையானால்தான், குற்றங்கள் குறையும். உள்ளாட்சி தேர்தல் எப்போது நடந்தாலும், அதனை எதிர்கொள்ள தேமுதிக தயாராக உள்ளது. வெங்காய விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Premalatha , The Treasurer, Premalatha, Lot Doctor, Sexual Harassment
× RELATED நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட...