மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஹைதராபாத்: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 94 ரன்களும், லோகேஷ் ராகுல் 62 ரன்களும் எடுத்துள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மியர் 56 ரன்களும், எவின் லூயிஸ் 40 ரன்களும் எடுத்துள்ளனர்.

Related Stories:

>