அத்திமரப்பட்டியை அடிக்கடி புறக்கணிக்கும் பஸ்கள்: மாணவ, மாணவிகள் பாதிப்பு

ஸ்பிக்நகர்: அத்திமரப்பட்டியை அடிக்கடி புறக்கணிக்கும் பஸ்களால் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் இருந்து தூத்துக்குடி மற்றும் முத்தையாபுரம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவர்கள் அத்திமரப்பட்டிக்கு காலை 7.30 மணி மற்றும் 9 மணிக்கு வரும் பேரூந்துகள் மூலம் சென்று வருகின்றனர்.இந்த பேரூந்துகள் அடிக்கடி நிறுத்தப்படுவதாக புகார் கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல் வீடுகளில் இருந்து பள்ளிக்கு செல்ல புறப்பட்டு வந்த மாணவர்கள் பேரூந்து வராததால் அத்திமரப்பட்டியில் இருந்து ஸ்பிக்நகருக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்தனர்.

பின்னர் அங்கிருந்து தூத்துக்குடிக்கு டவுன் பஸ்கள் மூலம் செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஸ்பிக்நகர் பேரூந்து நிலையத்தில் டவுன் பஸ்கள் நிற்காததாலும் பள்ளிக்கு செல்ல நேரமாகி விட்டதாலும் வேறு வழியின்றி மீண்டும் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அடிக்கடி இவ்வாறு பேருந்துகள் புறக்கணிக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிய நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : student , Figs, buses
× RELATED காரிமங்கலம் நகருக்குள் பொதுமக்களை அச்சுறுத்தும் அதிவேக தனியார் பஸ்கள்