வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது: ரவீஸ்குமார் பேச்சு

டெல்லி: நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஸ்குமார்; நித்தியானந்தா மீது சர்ச்சைகள் தொடர்வதை அடுத்து, அவர் வெளிநாடுகளில் பதுங்குவதைத் தடுக்க, அனைத்து நாடுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. சர்ச்சைகள் காரணமாக 2008ல் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட் காலாவதி ஆகும் முன்பே 2018ல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. நித்தியானந்தா பற்றி தவறான தகவல்கள் வந்ததால் அவருக்கு புதிய பாஸ்போர்ட் ஏதும் வழங்கப்படவில்லை.  

Advertising
Advertising

வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் நித்தியானந்தாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது என கூறினார். மேலும் பேசிய அவர்;  சூடானில் தீ விபத்தில் இறந்த 6 இந்தியர்கள் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சூடானில் ஓடு தயாரிக்கும் ஆலையில் 58 இந்தியர்கள் பணி புரிந்து வந்தனர். அதில் 33 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரவீஸ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: