வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு: வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் வீணானது

தேனி: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே புதூர் பகுதியில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகியது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரை கொண்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டது. இக்கால்வாயில் கடந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டியுள்ளதால் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர்.

நேற்று காலை வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்க்கான மதகு மூலம் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஆண்டிபட்டி அருகே புதூர் பகுதியில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணானது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட 33 கண்மாய்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் 2 ஆயிரத்து 285 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.


Tags : village canal ,Water opening ,Vaigai Dam , Vaigai Dam, break in mouth
× RELATED ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 960 கனஅடியாக அதிகரிப்பு