×

வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது அலகாபாத் நீதிமன்றம்

லக்னோ: பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்ட எல்லைப் பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தொடர்ந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய தேஜ் பகதுார், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு, தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறியிருந்தார். இதையடுத்து, நடத்தை விதிமுறைகளின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் நாளடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

மேலும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி சார்பாக சமாஜ் வாதி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. பணி நீக்கம் செய்யப்பட்ட வீரர்கள் ஐந்து வருடத்திற்கு தேர்தலில் போட்டியிட கூடாது என்று கூறி தேர்தல் ஆணையம் அவரின் மனுவை நிராகரித்து இருக்கிறது. வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு முன்னர், தனது தரப்பை எடுத்துரைக்க யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி மனோஜ் குப்தா, தேஜ் பகதூர் யாதவ் முன்வைத்த கோரிக்கையை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு முன்னர், தனது தரப்பை எடுத்துரைக்க யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர் வாதம் செய்தார். இதனை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி மனோஜ் குப்தா, தேஜ் பகதூர் யாதவ் முன்வைத்த கோரிக்கையை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்.

Tags : court ,Modi ,Allahabad ,victory ,Varanasi ,Lok Sabha , Varanasi Lok Sabha seat, PM Modi, Allahabad court
× RELATED செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில்...